ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில், 12 வயது சிறுமி மீது அமிலம் வீசி அவரது வாழ்க்கையையே சிதைத்த கொடூரனுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சித்தோர்கர் ரயில் நிலையத்தில் தனது தாயுடன் நின்று கொண்டிருந்த சிறுமி மொஜாபி மீது, முகமது இஸ்மாயில் என்ற நபர் அமிலத்தை வீசியுள்ளார். தனது தாயைக் காப்பாற்ற முயன்ற அந்தச் சிறுமியின் முகமும், ஒரு கண்ணும் அமிலத்தால் முற்றிலுமாகச் சிதைந்து போனது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி உத்தமா மாத்தூர், “இது ஒரு தனிநபர் மீதான தாக்குதல் அல்ல, ஒட்டுமொத்த நாகரிக சமூகத்தின் ஆன்மா மற்றும் மனிதநேயத்தின் மீதான கொடூரமான தாக்குதல்” எனக் கடும் கண்டனம் தெரிவித்தார். குற்றவாளி முகமது இஸ்மாயிலுக்கு ஆயுள் தண்டனையுடன் 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு பிஞ்சு குழந்தையின் எதிர்காலத்தையே இருளாக்கிய இந்தச் சம்பவம் மற்றும் அதற்கு கிடைத்துள்ள அதிரடி தீர்ப்பு ராஜஸ்தான் மாநிலத்தையே உலுக்கியுள்ளது.
