சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில சுவாரஸ்யமான மற்றும் ரசிக்கத்தக்க வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது பீகார் மாநிலத்திலிருந்து வெளியாகியுள்ள ஒரு பள்ளிச் சிறுவனின் வீடியோ இணையவாசிகளைக் கவர்ந்து வருகிறது.
அந்த வீடியோவில், பள்ளியில் காலைப் பிரார்த்தனை (Prayer) நடந்து கொண்டிருக்கும் போது, அனைத்து மாணவர்களும் கண்களை மூடிப் பாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த ஒரு சிறுவன் மட்டும் மிகச் சாமர்த்தியமாகத் தனது கண்களை மூடியபடியே, யாருக்கும் தெரியாமல் தனது பாக்கெட்டில் இருந்த சாக்லேட்டை எடுத்துச் சாப்பிடுகிறான்.
ஆசிரியர்களிடம் சிக்கிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் அந்தச் சிறுவன், பிரார்த்தனைப் பாடலுக்குத் தகுந்தபடி வாயை அசைத்தவாறே சாக்லேட்டைச் சுவைப்பது பார்ப்பவர்களைப் புன்னகைக்க வைத்துள்ளது.
“Innocent kid is viral on internet.”🔥
School children are doing morning prayer,
but this cute boy is busy eating chocolate first. It reminds us our school-time innocence:“Pahle Pet Puja, Phir Kaam Duja.” 🤣❣️ pic.twitter.com/XtFVEWoVeW
— Mission Ambedkar (@MissionAmbedkar) March 25, 2026
“>
“செம டேலண்ட் தம்பி உனக்கு!” என்றும், “சிறுவயது குறும்புகள் என்றும் மாறாதவை” என்றும் நெட்டிசன்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
