மேற்கு அமெரிக்க நாடான நைஜரியாவின் தலைநகர் நியாமிலிருந்து 130 கி.மீ. தொலைவில் டாசோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் கட்டுமான வேலைகள் நடைபெற்று வந்ததால் அதற்கு ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது திடீரென பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு ராணுவ வீரர்களும் தாக்குதல் நடத்தினர்.
அப்போது இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் பயங்கரவாதிகள் தாக்கியதால் 2 சராசரி இந்தியர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒரு இந்தியர் கடத்தி செல்லப்பட்டார். இதுகுறித்து நைஜர் இந்திய தூதரகத்திற்கு ஒரு செய்தி அனுப்பி இருந்தது.
அதில் அவர்கள் கூறியதாவது கடத்திச் செல்லப்பட்ட இந்தியரை மீட்பதற்கான மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் உயிரிழந்த 2 இந்தியர்களின் உடல்களை விரைவில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தனர்.
மேலும் நைஜீரியாவில் உள்ள இந்தியர்கள் கவனமாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
