ஹாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா நடித்து வரக்கூடிய சிட்டாடல் வெப் தொடரின் ஹிந்தி ரீமேக்கில் இப்போது சமந்தா நடித்து வருகிறார். ஏற்கனவே ஹிந்தியில் அவர் நடித்த தி பேமிலிமேன்- 2 எனும் வெப் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகே ஆகிய இருவரும் தான் இந்த சிட்டாடல் தொடரையும் இயக்கி வருகின்றனர். இத்தொடரில் சமந்தாவுக்கு ஜோடியாக வருண் தவான் நடிக்கிறார்.

இவர்கள் நடிக்கும் காட்சிகள் இப்போது செர்பியா நாட்டில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு உள்ள ஒரு பப்புக்கு சிட்டாடல் படக்குழு சென்றுள்ளது. அப்போது புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலின் தெலுங்கு பதிப்பான ஊ அண்டவா எனும் பாடல் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் சமந்தாவை அதற்கு நடனமாடுமாறு கேட்டுக்கொண்டதை அடுத்து, அவர் டான்ஸ்  ஆடி இருக்கிறார். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.