பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது இயக்குனர் சந்தீப்ரெட்டி வங்கா இயக்கத்தில் “அனிமல்” படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படத்தில் அனில் கபூர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சமீபத்தில் “அனிமல்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த படம் வருகிற ஆகஸ்ட் 11ம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் அனிமல் திரைப்படத்தின் ப்ரீ-டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.