சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மேடையிலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்குப் பக்கவாதம் (Stroke) ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவர்கள் அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

​மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எச்.ராஜாவை அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே வானதி சீனிவாசன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் நேரில் சென்ற நிலையில், தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் மருத்துவமனைக்குச் சென்று அவரது உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார். எச்.ராஜா விரைவில் குணமடைய வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் தங்களது விருப்பங்களைத் தெரிவித்து வருகின்றனர்.