வேலூர் மாவட்டம் செதுவாலை கிராமத்தைச் சேர்ந்தவர் இருசப்பன். இவர் தனியார் மருத்துவமனையில் டிரைவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இருசப்பன் தான் புதிதாக கட்டிய வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு விரிஞ்சிபுரம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
மேலும் மின்கம்பம் நடுவதற்காக ஆன்லைன் மூலம் 27 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்தியுள்ளார். இருப்பினும் போர்மேனாக வேலை பார்க்கும் கிருபாகரன் என்பவர் மின் இணைப்பு வழங்க 3000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து இருசப்பன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை இருசப்பன் கிருபாகரனிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கிருபாகரனை கையும் களவுமாக பிடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
