சென்னை மாவட்டம் நுங்கம்பாக்கத்தில் உள்ள மதுபாருக்கு போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஹரிஹர புத்திரன் என்பவர் தனது இரண்டு நண்பர்களுடன் வந்தார். அந்த பாரில் நடனமாடிக் கொண்டிருந்த இளம் பெண்ணுக்கு ஹரிஹர புத்திரனும் அவரது நண்பர்களும் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளனர்.

இதுகுறித்து இளம்பெண் பார் மேலாளர் தருண்குமாரிடம் கூறியுள்ளார். உடனே தருண்குமார் மூன்று பேரையும் தட்டிக் கேட்டபோது கோபத்தில் அவர்கள் தருண் குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது..

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இளம் பெண்ணிற்கு பாலியல் தொந்தரவாளித்த ஆரோக்கியநாதன் அஸ்வான் இருவரையும் கைது செய்தனர். தலைமறையாக இருக்கும் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஹரிஹர புத்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.