கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனுமதி இல்லாத தடை செய்யப்பட்ட நாட்டு வெடி மற்றும் சீன வெடிகளை விற்பனை செய்யக்கூடாது என்றும் வெளி பொருள்கள் தயாரிப்பு மற்றும் பட்டாசு விற்பனை கடைகளில் மொபைல் போன் எக்காரணத்தை கொண்டும் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், பட்டாசு உரிமம் பெற்ற விற்பனையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில் அந்தக் கூட்டத்தில் முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளிபொருள்கள் தயாரிப்பு மற்றும் பட்டாசு விற்பனை மற்றும் வெடிபொருள்கள் இருப்பு ஆகியவற்றை வரன்முறை படுத்த வேண்டும். வெடிபொருள் தயாரிக்கும் உரிம தளங்களை அரசு அலுவலர்கள் தணிக்கை செய்ய வேண்டும். பட்டாசு தயாரிக்கும் இடங்களில் அனுமதித்த அளவு மட்டுமே வெளிபொருட்களை தயாரிக்க வேண்டும். அனுமதித்த இடங்களை தவிர வேறு இடங்களில் தயாரிப்பு மற்றும் சேமிப்பு உள்ளிட்ட பணிகளை எக்காரணத்தை கொண்டு மேற்கொள்ளக்கூடாது. எரிபொருள் தயாரிப்பு மற்றும் பட்டாசு விற்பனை செய்யும் இடங்களில் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.