செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி, இஸ்லாமியர்கள் மீது திடீர் பாசம் சொல்லி சி.எம் கோபப்படுகிறார். கூட்டணி என்பது வேற. கொள்கை என்பது வேற.. திராவிட முன்னேற்ற கழகம் 1999இல் பாரதிய ஜனதா கட்சியோட கூட்டணி வச்சாங்களா ?  இல்லையா ? வச்சாங்க இல்ல.. ஐந்தாண்டு காலம் ஆட்சியில இருந்தாங்க… அதிகாரத்தை சுவைச்சாங்க….  அப்ப எல்லாம் பாரதிய ஜனதா கட்சி தெரில.

கூட்டணி என்பது வேறு. தேர்தல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கூட்டணி அமைப்பாங்க, வெற்றி பெறுவாங்க. அது போல தான் நாங்களும் கூட்டணி அமைச்சோம். இன்றைக்கு அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டோம். விலகிய பிறகு திராவிட முன்னேற்றக் கழக தலைவருக்கு பயம் வந்துவிட்டது, அச்சம் வந்துவிட்டது. அதனால்தான் இப்படி கோபப்பட்டு பேசுகிறார்.

இந்தியா கூட்டணியில் 26 கட்சி  சேர்ந்திருக்கிறது. இது எல்லாம் ஒரே கொள்கை இருக்குதா ? சனாதனத்தை பத்தி பேசுறீங்க. அங்க இருக்கிறவர் முடியாதுங்குறாரு….  இங்க இருக்குற திமுக,  இன்னைக்கு பேசுறாங்க. கொள்கை முரண்பாடு இருக்குதுல்ல. அதே மாதிரி தான் அண்ணா திமுக அணைக்கு கூட்டணியில இடம் பெறுகின்ற இப்பொழுது CAA சட்டம் ஆதரித்தோம். 

நான் ஏற்கனவே தெளிவாக பேட்டி   கொடுத்திருக்கிறேன். நாம் கூட்டணியில் இருக்கும் பொழுது கூட்டணி தர்மத்தை கடைபிடிக்க  வேண்டிய  நிலைக்கு தள்ளப்படுகிறோம். நமக்கு உடன்படாத சிலதை  நாம் நிறைவேற்ற வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறோம் என ஏற்கனவே எடப்பாடியில் நான் தெளிவாக குறிப்பிட்டேன்.

நாங்க ஒரு கூட்டணியில் அங்கம் வகித்ததால்… அதுவும் தேசிய அளவில் இருக்கும் கட்சிகளோடு  கூட்டணி வைக்கின்ற பொழுது,  நமக்கு உடன்படாத சில பிரச்சனைகள் வந்தாலும்,  கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் ஆதரவு கொடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகிறோம், அந்த அடிப்படை தான் CAA, NRC-க்கு ஆதரவு கொடுத்தோம் என தெரிவித்தார்.