செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  சனாதன தருமத்தில் ஜாதிகள் இருக்கு. உயர் ஜாதி,  கீழ் ஜாதி அப்படின்னு ஒன்னு இருக்குன்னா நானே ஏத்துக்க மாட்டேன். நானே ஏத்துக்க போறது கிடையாது. ஜாதிக்கு எதிரிதான் முதல் எதிரி நானு… ஆனால்  சனாதன தருமத்தில் அது இல்ல என சொல்லுறேன். சில மனிதர்கள்… சில கால கட்டத்துல கொண்டு வந்தாங்கன்னா…. வேறு மனிதர்கள்,  வேறு கால கட்டத்துல எதிர்த்து நின்னுருக்காங்க…. 

இவங்க ஏதோ ஒன்னை புடிச்சுகிட்டு,  இதனால நான் எதிர்க்கிறேன் என  சொல்லுறது முட்டாள்தனம். அண்ணாமலை ஜாதிகள் இருக்கு. மேல் ஜாதி,  கீழ் ஜாதி இருக்கு  அதை ஏத்துகிறாரா ? ஏத்துக்கல.. சனாதன தருமத்தில் அது இருக்கா?  இல்லை. இருக்குன்னு சொன்னா வாங்க விவாதிப்போம். இதைத்தான் நாம்ம சொல்லுறோம். அதுனால அவங்களுக்கு தெரியும்…  உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தெரியும்…

சனாதன தருமத்தை திரிச்சி பேசி, அதன் மூலமாக அரசியல் லாபம் கிடைக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் நினைத்தால்,  அது நடக்காது என்பதை புரிஞ்சிகிட்டு தான்… முதல்ல முதலமைச்சர் மாண்புமிகு திரு மு க ஸ்டாலின் அவர்கள் அறிக்கை விட்டாங்க. திமுகவில் யாரும்  சனாதன தருமத்தை பத்தி பேசாதீங்க. இன்னைக்கு உதயநிதி ஸ்டாலின் சொல்லுறாங்க…  2024 பின்பு பேசுவோம் அப்படினு….  இது  எல்லாம் வன்மையாக கண்டிக்கதக்கது என தெரிவித்தார்.