செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மையருக்கு எதிரான கட்சியா சத்தியமா கிடையாது. ஒரு சிறுபான்மையர் எதிர்த்து அண்ணாமலை பேசிருக்கானா… கண்டிப்பா கிடையாது.  ஏற்கனவே சொன்னேன்,  இந்துக்கள் பிரச்சனை வரும் பொழுது முதலாக பேசகூடிய அண்ணாமலை…. இஸ்லாமியருக்கும் ,  கிருஸ்தவருக்கும் பிரச்சனை வரும்போது முதல் ஆளாக  சத்தியமா பேசுவேன்.

என்னோட ஸ்டண்ட்டை நான் தெளிவு படுத்தின பிறகு,  இன்னொருவர் சொல்லக்கூடிய கருத்துக்கு பதில் கருத்து வச்சி என்ன பிரயோஜனம்?  சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என சொல்லலை. எல்லா வாக்கும் முக்கியம்.  8 1/2 கோடி பேர். 6 கோடி வாக்காளர்கள் ஒரு ஒரு வாக்கும் சமம், ஒரு ஒரு வாக்கும் முக்கியம். எல்லாமே சரிதான்.

இதுல இந்த ஜாதி வாக்கு,  சிறுபான்மையினர் வாக்கு,  இஸ்லாமியர் வாக்கு,  இந்துக்கள் வாக்கு,  இந்த வாக்குக்கு வெய்ட்டேஜ்  அதிகம் என கிடையாது. எல்லா வாக்கும் சமம்தான். பாரதிய ஜனதா கட்சி பொறுத்த வரை,  அனைவருக்கும்  சமமாக இருக்கிறோம். யாருக்கும் எதிரியாக இல்லை. அதை மக்கள் வருகின்ற காலத்துல புரிஞ்சிப்பாங்க. பேச்சை பாப்பாங்க… இவங்க பேச்சும்,  நடவடிக்கையும் ஒன்றா இருக்கான்னு என தெரிவித்தார்.