உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் லிசாடி கேட் பகுதியில் சனிக்கிழமை காலை பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. 35 வயதான சமையல்காரர் அஸ்லம் அன்சாரி, தனது மகள்கள் ஸைனாப் மற்றும் ஆயிஷாவை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் திடீரென அவரை அணுகி, தலையில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு தப்பினர். இந்த அதிர்ச்சி சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அஸ்லமின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன், அங்கு இருந்த கார்ட்ரிட்ஜ் ஓட்டையும் மீட்டனர். தொடக்க விசாரணையில் பழைய விரோதமே இந்தக் கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும் அஸ்லம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு, அவர் உயிர் தப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
उत्तर प्रदेश : मेरठ में असलम की दिनदहाड़े गोली मारकर हत्या कर दी गई। फैमिली में प्रॉपर्टी विवाद है। उसी में हत्या की आशंका है।
⚠️ Sensitive Video⚠️ pic.twitter.com/XuLB5XQ9hi
— Sachin Gupta (@SachinGuptaUP) August 9, 2025
“>
மீரட் எஸ்பி (சிட்டி) ஆயுஷ் விக்ரம் சிங் தெரிவித்ததாவது, குற்றவாளிகளை பிடிக்க SWAT பிரிவு உட்பட மூன்று தனி விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளை விரைவில் கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
