ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் இருந்த ஈரானின் போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலில் 87 வீரர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஈரான் படுதோல்வி அடைந்துவிட்டதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரான் நிபந்தனையின்றி சரணடையும் வரை இந்தத் தாக்குதல்கள் ஓயாது என்றும், இன்று ஈரானின் மீது இன்னும் பெரிய அளவிலான தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனது ‘சோஷியல் ட்ரூத்’ பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், ஈரான் இப்போது பயந்துபோய் மன்னிப்பு கேட்டு சரணடைந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வளைகுடா நாடுகள் மீது இனி தாக்குதல் நடத்த மாட்டோம் என்று ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மத்திய கிழக்கு நாடுகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைத்த ஈரானின் கனவு இப்போது தகர்ந்துவிட்டதாகவும் அவர் சாடியுள்ளார்.
இதற்கிடையில், ஈரான் அதிபரும் அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரியுள்ள நிலையில், தங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படாத வரை தாங்களும் பதிலடி கொடுக்க மாட்டோம் என்று ஒரு தற்காப்பு நிலையை எடுத்துள்ளார்.
