தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஐடிஐ-களில் 026-ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

இதில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் www.skilltraining.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகத் தங்களது விண்ணப்பங்களை எளிதாகச் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஐடிஐ படிப்புகளில் சேர்ந்து பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கல்வி ஊக்கத்தொகையாக மாதந்தோறும் 750 ரூபாய் வீதம் வழங்கப்படும்.

இது தவிர, 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து இதில் சேரும் மாணவர்களுக்குத் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தின் கீழும், மாணவிகளுக்குப் ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழும் கூடுதலாக மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.