தமிழக அரசியலில் அடுத்த விக்கெட் அவுட்! தவெக தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், கட்சிக்குள் புதிய நிர்வாகிகள் சேர்க்கை அதிரடியாக அரங்கேறி வருகிறது. அந்த வகையில், அதிமுகவின் முக்கியப் புள்ளியும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.ராமச்சந்திரன் தற்போது தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.
அதிமுகவின் வர்த்தக அணி மாநில இணை செயலாளராக இருந்த கே.என்.ராமச்சந்திரன், தவெகவின் மாநில பொதுச்செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்த் முன்னிலையில் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார். தவெக மாபெரும் வெற்றி பெற்று தமிழகத்தில் புதிய அரசியல் சகாப்தத்தை தொடங்கியுள்ள வேளையில், அதிமுகவின் சீனியர் நிர்வாகி ஒருவர் தவெகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
