அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மத்திய கிழக்கு ஆசியாவில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே சமாதானம் பேசும் ‘மத்தியஸ்தர்’ (Middleman) வேலையை பாகிஸ்தான் கையில் எடுத்துள்ளது. இந்த வாரம் இஸ்லாமாபாத்தில் ஈரான் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே ரகசியப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், இந்த விவகாரத்தில் இஸ்ரேல் தற்போது குறுக்கிட்டு அமெரிக்காவிற்கு ஒரு பலமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. “ஏற்கனவே ஈரான், வடகொரியா போன்ற நாடுகளுக்கு அணு ஆயுதத் தொழில்நுட்பத்தை ரகசியமாக வழங்கிய பாகிஸ்தானை எப்படி நம்பலாம்?” என்று இஸ்ரேல் கேள்வி எழுப்பியுள்ளது.
பிரச்சினையை உருவாக்கியவர்களே அதற்குத் தீர்வாக இருக்க முடியாது என்று சாடியுள்ள இஸ்ரேலிய நிபுணர்கள், பாகிஸ்தான் ஒரு நடுநிலையான நாடு கிடையாது என்றும், அது ராணுவ ஆட்சி நடக்கும் நாடு என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
1970-களில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே ரகசியத் தொடர்பை ஏற்படுத்தியது போல, இப்போதும் ஒரு ‘பிரிட்ஜ்’ போலச் செயல்பட்டு அமெரிக்காவின் நன்மதிப்பைப் பெற பாகிஸ்தான் முயல்கிறது.
இதன் மூலம் தனது பொருளாதாரச் சிக்கலைத் தீர்க்கவும், தன் மீதுள்ள பயங்கரவாத முத்திரையை மறைக்கவும் பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தான் பெரிய மனுஷன் வேலை பார்ப்பதை இந்தியா, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், அமெரிக்கா இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் இஸ்ரேல் அழுத்தம் கொடுத்துள்ளது.
