உத்தரப்பிரதேசத்தில் தந்தை மறைந்ததால் பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த ஒரு மாணவி, மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க முறையிட்ட சம்பவம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. “அங்கிள்! என் அப்பா இப்போது உயிருடன் இல்லை, என்னால் கட்டணம் செலுத்த முடியவில்லை.
இப்போது நான் எப்படி பொதுத்தேர்வு எழுதுவேன்?” என்று அந்தச் சிறுமி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கதறி அழுதார். குடும்பத்தின் வறுமை மற்றும் தந்தையின் இழப்பால் தனது கல்வி கனவு சிதைந்துவிடுமோ என்ற அச்சத்தில் அந்த மாணவி வெளிப்படுத்திய இந்த வேதனை, அங்கு கூடிருந்த அதிகாரிகளை நிலைகுலையச் செய்தது.
இந்தச் சூழலை மனிதாபிமானத்துடன் அணுகிய மாவட்ட ஆட்சியர், அந்த மாணவிக்கு உடனடியாக ஆறுதல் கூறி, அவரது கல்வித் தடையின்றி தொடர தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்தச் செய்தி, ஏழைக் குழந்தைகளின் கல்வி உரிமையைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது.
இந்நிலையில் அதிகாரியின் இந்த உடனடி தலையீடு அந்த மாணவியின் வாழ்வில் ஒரு புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது, இதன் மூலம் அவர் எவ்வித தடையுமின்றி தனது போர்டு தேர்வுகளை எழுத வழிவகை செய்யப்பட்டுள்ளது.
