உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் பார்ப்பவர்களின் நெஞ்சை உறைய வைக்கும் ஒரு விபத்து நிகழ்ந்துள்ளது. தனது குழந்தைகளை ஸ்கூட்டியில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்குச் சென்ற தாய் ஒருவர், பள்ளியின் அருகே வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

ஒரு குழந்தையை ஸ்கூட்டியில் இருந்து கீழே இறக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தபோது, ஸ்கூட்டியின் முன் பகுதியில் நின்றிருந்த மற்றொரு குழந்தை எதிர்பாராத விதமாக வாகனத்தின் வேகக்கட்டுப்பாட்டை (Accelerator) திடீரெனத் திருப்பியது. இதனால் ஸ்கூட்டி மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்து முன்னால் இருந்த சுவரில் பலமாக மோதியது.

“>

இந்த விபத்தில் ஸ்கூட்டியில் இருந்த தாயும் குழந்தைகளும் தூக்கி வீசப்பட்டனர். இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு சிறிய கவனக்குறைவு எத்தகைய விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதற்குச் சாட்சியாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது.