மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளின் போது, பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரண நிதியில் சுமார் 2.5 கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் பெண் வட்டாட்சியர் அமிதா சிங் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இவர் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘கோடீஸ்வரன்’ போட்டியில் பங்கேற்று 50 லட்சம் ரூபாய் வென்று தேசிய அளவில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஷியோபூர் மாவட்டத்தில் வட்டாட்சியராகப் பணியாற்றிய போது, தகுதியற்ற நபர்களின் வங்கிப் பெயர்களைப் பயன்படுத்தி அரசுப் பணத்தைக் கையாடல் செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த முறைகேடு தொடர்பாகப் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அமிதா சிங் தரப்பில் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்ட போதிலும், மக்களின் துயரத்தைப் பயன்படுத்தி அரசுப் பணத்தை மோசடி செய்தது மன்னிக்க முடியாத குற்றம் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டன. இதனைத் தொடர்ந்து, குவாலியரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்துப் போலீசார் அவரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். அமிதா சிங் ஏற்கனவே அவரது பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
