தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே, தனது அக்கா முறையற்ற உறவில் இருப்பதாகக் கருதி தம்பியே அவரைக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த சண்முகத்தாய் என்பவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டாகத் தனியாக வசித்து வந்துள்ளார். சுமித்ரா சிலருடன் தவறான உறவில் இருப்பதாக அவரது தம்பி முத்துராஜாவுக்குத் தெரியவந்துள்ளது.

இது குறித்து தம்பி எச்சரித்தபோதும், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முத்துராஜா, தனது அக்காவிடமிருந்து குடும்பத்திற்கு அவமானம் ஏற்படுவதாகக் கருதி அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டார். சம்பவத்தன்று இரவு தனது நண்பர் வசந்துடன் சுமித்ராவின் வீட்டிற்குச் சென்ற முத்துராஜா, அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தின் உச்சக்கட்டத்தில் சுமித்ராவை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

மேலும் இதில் ரத்த வெள்ளத்தில் சுமித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த செய்துங்கநல்லூர் போலீசார், தலைமறைவாக இருந்த முத்துராஜா மற்றும் அவரது நண்பர் வசந்தைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.