தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று நடைபெற்ற போது கரூர் விவகாரம் தொடர்பாக அதிமுக மற்றும் திமுக இடையே காரசார விவாதம் நடைபெற்ற நிலையில் பின்னர் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இதேபோன்று பாஜகவும் கரூர் விவகாரத்தால் வெளிநடப்பு செய்தது. அதாவது கரூர் விவகாரத்தில் திமுக அரசு மற்றும் போலீசார் உரிய பாதுகாப்பு கொடுக்காதது உயிரிழப்புக்கு காரணம் என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டிய நிலையில் இந்த விஷயத்தில் ஏதோ மர்மம் இருப்பதாகவும் அவசரமாக பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது என எல்லாமே சந்தேகத்திற்கு இடமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக விளக்கம் கொடுத்த போதிலும் எடப்பாடி பழனிச்சாமி அதனை ஏற்க மறுத்த நிலையில் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கரூர் விவகாரம் தொடர்பாக பேட்டி கொடுத்தார். இந்த நிலையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கிட்னி விவகாரம் தொடர்பாக பேச முடிவு செய்துள்ளனர். அதன்படி கிட்னிகள் ஜாக்கிரதை என்ற பேட்ஜ் அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் வருகை புரிந்துள்ளனர். நேற்று கரூர் விவகாரம் தொடர்பாக கையில் கருப்பு பட்டை அணிந்து வந்திருந்த நிலையில் இன்று கிட்னி ஜாக்கிரதை என்ற பேட்ஜ் அணிந்து வந்துள்ளனர். மேலும் இது தொடர்பாக இன்று சட்டசபையில் விவாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
