அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். நேற்று திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் அவர் வாகனத்தில் இருந்தபடி மக்களிடையே உரையாற்றினார்.

அப்போது அவருக்கு அருகில் நின்று கொண்டிருந்த மாவட்ட செயலாளர் பலராமன் எதிர்பாராத விதமாக திடீரென மயங்கி விழுந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. சிறிது நேரத்திற்குப் பிறகு உடல்நலம் தேறிய பலராமன், மீண்டும் பரப்புரை வாகனத்தில் ஏறி எடப்பாடி பழனிசாமிக்கு ‘வீர வாள்’ ஒன்றைப் பரிசாக வழங்கினார்.

இந்தச் சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் நிலவிய பதற்றம் பின்னர் தணிந்தது.