இந்தியாவில் நடைபெறவுள்ள 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க வங்கதேச அரசு பாதுகாப்பு காரணங்களைக் கூறி மறுத்து வரும் நிலையில், அந்நாட்டின் விளையாட்டு ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் நேரடித் தொலைக்காட்சியில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை (ICC) கடுமையாக விமர்சித்துள்ளார்.
டாக்காவில் நடைபெற்று வரும் வங்கதேச பிரீமியர் லீக் (BPL) போட்டியின் போது பேட்டியளித்த அவர், வங்கதேச அணி தகுதி பெற்றும்கூட, அவர்களைப் போட்டியில் இருந்து விலக்க ஐசிசி முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார். இந்தியாவிற்குப் பதில் இலங்கையில் போட்டிகளை நடத்த வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ள நிலையில், “எங்கள் வீரர்களுக்கு விளையாட உரிமை உண்டு, ஆனால் அவர்கள் அநியாயமாக விலக்கப்படுகிறார்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.
Cricket is more than a game. Advisor Asif Nazrul speaks, and the crowd reacts like a storm. 🌪️
BASHUNDHARA CEMENT BPL 2026
POWERED BY WALTON LIFT#BPL2026 pic.twitter.com/WpR4GxbSoP— Bangladesh Cricket (@BCBtigers) January 23, 2026
“>
இதனிடையே, வீரர்களிடம் எவ்வித ஆலோசனையும் நடத்தாமல் வங்கதேச அரசு எடுத்த இந்த தன்னிச்சையான முடிவால் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு சுமார் 240 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.
அரசின் இந்த பிடிவாதமான போக்கிற்குப் பதிலடியாக, வங்கதேசத்திற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணியை உலகக்கோப்பையில் சேர்க்க ஐசிசி திட்டமிட்டுள்ளதால், வங்கதேச கிரிக்கெட்டின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
