நகரமோ அல்லது கிராமமோ, இன்று தண்ணீர் மோட்டாரும் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகளும் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். குழாய் மூலம் தண்ணீர் பிடிப்பது இப்போது எளிதாகிவிட்டாலும், நாம் தினமும் பயன்படுத்தும் அந்த பெரிய பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகள் தொழிற்சாலைகளில் எப்படித் தயாரிக்கப்படுகின்றன என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம்.

இது குறித்த ஒரு சுவாரஸ்யமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு தண்ணீர் தொட்டி வடிவத்தில் இருக்கும் இரும்பு அச்சில், நீல நிற திரவத்தை ஊற்றி, அதை நட்டு மற்றும் போல்ட் மூலம் இறுக்கமாக மூடுகிறார்கள்.

பிறகு, அந்த அச்சு பெரிய நெருப்பு ஜுவாலைகளில் வைத்து சூடுபடுத்தப்பட்டு, பிளாஸ்டிக் உருகி தொட்டியின் வடிவத்தைப் பெறுகிறது. இந்தச் செயல்முறைக்குப் பிறகு, அந்த அச்சு தண்ணீரில் நனைக்கப்பட்டு குளிர்விக்கப்படுகிறது. பின்னர் இரும்பு அச்சிலிருந்து பிரிக்கப்படும்போது, ஒரு முழுமையான 500 லிட்டர் தண்ணீர் தொட்டி தயாராகி வெளியே வருகிறது.

ஒரு தண்ணீர் தொட்டியைத் தயாரிக்க அதன் அளவைப் பொறுத்து 20 நிமிடங்கள் முதல் 3 மணிநேரம் வரை ஆகலாம். இவ்வளவு பெரிய தொட்டி, ஒரு சிறிய அளவு திரவத்திலிருந்து உருவாவதைப் பார்த்து இணையவாசிகள் வியந்து போயுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Smartest Workers (@smartest.worker)

“>

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்து ரசிப்பதோடு, நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு பொருளின் பின்னால் இவ்வளவு உழைப்பு இருக்கிறதா என ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர்.