சமூக வலைதளங்களில் விலங்குகளின் வீடியோக்கள் எப்போதும் ரசிக்கப்படும், ஆனால் தற்போது வைரலாகி வரும் ஒரு கிளி குட்டியின் வீடியோ அனைவரையும் சிரிக்க வைப்பதோடு ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.
அந்த வீடியோவில், ஒரு வளர்ப்பு கிளி தனது எஜமானியிடம் மிகவும் ஆசையாகத் தக்காளி கேட்கிறது. ஆனால் அந்தப் பெண் தக்காளி தர மறுத்தவுடன், கோபமடைந்த அந்த கிளி சும்மா இருக்காமல், “போலீஸ்.. போலீஸ்..” என்று கத்தத் தொடங்குகிறது.
தக்காளி தராததற்காகத் தன் எஜமானியையே போலீசில் பிடித்துக் கொடுக்கப் போவதாக அந்த கிளி மிரட்டும் விதம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை ஆயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்துள்ளனர். அந்த கிளியின் உடல் மொழியும், அது கத்தும் ஸ்டைலும் நிஜமாகவே யாரோ ஒருவரை உதவிக்கு அழைப்பது போலவே இருக்கிறது.
இதைப் பார்த்த நெட்டிசன்கள், “இது அப்பட்டமான பிளாக்மெயில்”, “இனிமே கிளிகளிடம் கூட ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் போல” என்று ஜாலியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
वीडियो में तोता अपने मालिक से पुलिस बुलाने की बात करता दिख रहा है।
उसका अंदाज़ और शब्द लोगों को हैरान भी कर रहे हैं, हँसा भी रहे हैं।😍😊यही वजह है कि ये वीडियो सोशल मीडिया पर तेज़ी से वायरल हो रहा है। pic.twitter.com/WqshS4IHI0
— Aalia Nadim (@aalianadim) January 7, 2026“>
மனிதர்களைப் போலவே பேசும் இந்த கிளியின் க்யூட்டான மிரட்டல் இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
