சமூக வலைதளங்களில் சிகையலங்கார நிபுணர் ஒருவர், தனக்குத் தானே மிக வேகமாகவும் துல்லியமாகவும் முடி வெட்டிக்கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது. பொதுவாக மற்றவர்களுக்கு முடி வெட்டுவதே கலை நயம்மிக்க வேலை என்னும்போது, இந்த நபர் கண்ணாடியைப் பார்த்தபடி, குறிப்பாகத் தலையின் பின்புறம் உள்ள முடிகளை ஒரு நிபுணரைப் போல லாவகமாகக் கத்தரிக்கோல் மற்றும் சீப்பைக் கொண்டு வெட்டுவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அவரது கைகள் மின்னல் வேகத்தில் செயல்படுவதைப் பார்த்த நெட்டிசன்கள், இது சாதாரண விஷயமல்ல என்று பாராட்டி வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 89 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். வீடியோவைப் பார்த்த பயனர்கள், “இவர் உலகின் எட்டாவது அதிசயம்”, “நிஜமான ஹேக்கர் இவர்தான்” என வேடிக்கையான கமெண்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram
“>
ஒரு சிகையலங்கார நிபுணர் தனக்குத் தானே இவ்வளவு நேர்த்தியாக முடி வெட்டிக்கொள்வதை இதுவரை பார்த்ததில்லை எனப் பலரும் ஆச்சரியத்துடன் இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.
