சாலை பணிக்காக பள்ளம் தோண்டிய போது வீட்டின் ஒரு பகுதி சரிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூரில் நெடுஞ்சாலைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால் திடீர் மண் சரிவு ஏற்பட்டது. இதில் வீட்டின் ஒரு பகுதி சரிந்து விழுந்த நிலையில் முன்கூட்டியே வீட்டில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த நிலையில் சேதம் அடைந்த வீட்டை வருவாய் துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.