அமெரிக்காவின் ஒஹாயோ மாகாணத்தில் உள்ள அக்ரான் நகரில், நடுவானில் கட்டுப்பாட்டை இழந்த சிறிய ரக விமானம் ஒன்று குடியிருப்புப் பகுதியில் இருந்த வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அக்ரான் ஃபல்டன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ‘பைப்பர் பிஏ-28’ என்ற அந்த விமானம், கேன்டர்பரி சர்க்கிள் பகுதியில் விழுந்த வேகத்தில் விமானமும் அந்த வீடும் தீப்பிடித்து மளமளவென எரியத் தொடங்கின. இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த இருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதே சமயம், விமானம் மோதிய அந்த வீட்டில் இருந்த தம்பதியினரும் அவர்களது இரண்டு குழந்தைகளும் நூலிழையில் உயிர் தப்பியது பெரும் அதிசயமாகப் பார்க்கப்படுகிறது. தற்போது இந்த விபத்து குறித்து அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் மற்றும் விமான போக்குவரத்து நிர்வாகம் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளன.
