சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளி, பொதுமக்களை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. அதில், உணவுக்காக ஆக்ரோஷமாகிய ஒரு ராட்சத முதலை, தண்ணீரிலிருந்து திடீரென பாய்ந்து வெளியே வரும் அதிசயக் காட்சி பதிவாகியுள்ளது.

இந்த வீடியோவில், ஒருவர் இறந்த விலங்கொன்றை நீரின் அருகே கொண்டு செல்வது காணப்படுகிறது. அந்த நிமிடத்தில், தண்ணீருக்குள் முழுமையாக மறைந்திருந்த முதலை, விலங்கை நோக்கி வேகமாக பாய்ந்து வருகிறது. முதலில், அந்த நபர் பயந்து பின்னோக்கி செல்ல முயற்சிக்கிறார். ஆனால் முதலையின் வேகம் மற்றும் ஆபத்து புரிந்தவுடன், உடனே அந்த இறந்த விலங்கை அதன் வாயில் வைக்கிறார். உடனே முதலை அதை விழுங்குவதைக் காண முடிகிறது.

முதலைகள் பொதுவாகவே மிக ஆபத்தான வேட்டையாடும் விலங்குகள் என்று கருதப்படுகின்றன. அவற்றின் தாடை பிடியில் சிக்கிய இரைக்கு மீண்டும் உயிர் கொடுக்க முடியாது என்பதே உண்மை. இந்த வீடியோவில் அந்த உண்மை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்படுகிறது.

இக்காணொளிக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுக்களும், பயமும் கலந்த கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன. சிலர், “இது பசியின் சக்தி”, என்கிறார். மற்றொருவர், “இயற்கையின் உண்மையான வடிவம் இது”, எனக் கருத்து தெரிவித்துள்ளார். சிலர் இதனை நகைச்சுவையாக “முதலை சாப்பிடவில்லை, கோபத்தில் இருந்தது போல இருக்கிறது!” என்று பதிவிட்டுள்ளனர்.

முதலைக்கு உணவளிக்க விரைந்த அந்த நபரின் துணிவும், அதே சமயம் ஏற்படும் ஆபத்தும் இந்த வீடியோவின் முக்கியக் கோணமாக இருக்கிறது. பலர், இப்படியான முயற்சிகளை தவிர்க்க வேண்டும் என்றும், இயற்கை விலங்குகளிடம் பத்திரமாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.