நாம் அன்றாடம் வாங்கி உண்ணும் உணவுகளின் தரம் எந்தளவுக்கு இருக்கிறது என்ற அச்சம் பலருக்கும் இருந்து வரும் நிலையில், அதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
இனிப்புக் கடை ஒன்றில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையின் போது, கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த இனிப்புகளைக் கடை உரிமையாளரே சாப்பிட மறுத்த சம்பவம் இணையத்தில் பரவி, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மக்கள் அன்றாடம் நம்பி வாங்கிச் சாப்பிடும் உணவகங்களில் தரம் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை இந்த ஒற்றைச் சம்பவம் அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டியுள்ளது. அதிகாரிகள் கடையில் ஆய்வு மேற்கொண்ட போது, அங்கு தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த இனிப்புகளின் தரம் குறித்து சந்தேகமடைந்துள்ளனர்.
இதனால் உடனடியாக அதிகாரிகளில் ஒருவர், “உங்கள் கடையில் செய்த இனிப்புதானே, அப்படியானால் இதை நீங்கள் முதலில் சாப்பிட்டுக் காட்டுங்கள்” என்று கடை உரிமையாளரிடம் கொடுத்துள்ளனர். ஆனால், அந்த உரிமையாளரோ சற்றும் யோசிக்காமல் அதைத் தான் சாப்பிட முடியாது எனத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
தன் சொந்தக் கடையில் தயார் செய்த இனிப்பைத் தானே சாப்பிட மறுத்த உரிமையாளரின் இந்தத் தயக்கமும் பயமும், அந்த இனிப்புகளில் சேர்க்கப்பட்டுள்ள கலப்படத்தையும், சுகாதாரமற்ற தயாரிப்பு முறையையும் தெள்ளத்தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளது.
இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் அந்தக் கடை உரிமையாளரின் செயலைக் கடுமையாகக் கண்டித்து வருகின்றனர். “தான் சாப்பிட யோசிக்கும் ஒரு பொருளைத் தான் பிற மனிதர்களுக்கு காசு வாங்கிட்டு விற்கிறார்களா?” என மக்கள் தங்களது ஆதங்கத்தையும் கோபத்தையும் காரசாரமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அவர் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு மக்களின் வயிற்றில் விளையாடும் இதுபோன்ற உணவகங்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
हमीरपुर में मिठाई दुकानदार ने अपनी ही मिठाई खाने से किया मना….
जैसे ही उसकी दुकान पर छापेमारी करने पहुंची टीम को मिठाई में मिलावट दिखी तो अधिकारी ने कहा कि ये अपनी मिठाई पहले खुद खाकर दिखाओ लेकिन दुकानदार ने मना कर दिया और बोला कि मैं नहीं खा सकता इसे ये स्वास्थ्य के लिए ठीक… pic.twitter.com/BJ7kOGhkNq
— Pushpraj sharma (@RealpushprajX) August 21, 2026
“>
