ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு 2026 சீசனின் தனது கடைசி லீக் போட்டியை மே 24 அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. இப்போட்டியை முன்னிட்டு 20,000 ஏழைக் குழந்தைகளை இலவசமாகக் கூட்டி வந்து மும்பை அணி நிர்வாகம் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய வேளையில், சமூக வலைதளங்களில் மற்றொரு சுவாரசியமான வீடியோ வைரலாகி வருகிறது.
திருபாய் அம்பானி சர்வதேசப் பள்ளியின் பட்டமளிப்பு விழாவில், மாணவர் தலைவர் ஒருவர் மேடையில் பேசும்போது, இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி சந்தித்த மோசமான தோல்விகளைப் பற்றி, அந்த அணியின் உரிமையாளரான நீதா அம்பானி முன்னிலையிலேயே செம்மயாகக் கிண்டலடித்துள்ளார்.
வாழ்வில் நாம் சந்திக்கும் சவால்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று சக மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய அந்த மாணவர், “நமது அன்பிற்குரிய மும்பை இந்தியன்ஸ் அணியைப் போல நாமும் வாழ்க்கையில் சில கடினமான மோசமான காலங்களைச் சந்திப்போம்” என்று கலகலப்பாகப் பேச, அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.
இந்த எதிர்பாராத கிண்டலைக் கேட்ட நீதா அம்பானி, மேடையிலேயே லேசான தர்மசங்கடத்துடன் தனது முகத்தை கைகளால் மூடிப் புன்னகைத்தார். பின்னர், சக அதிகாரிகளுடன் சேர்ந்து அவரும் இந்த நகைச்சுவையை ரசித்துச் சிரித்தார்.
நடப்பு 2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறி, புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்திற்குத் தள்ளப்பட்டு மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது.
Student make fun of Mumbai Indians in front of Nita Ambani
– Look at reaction of Nita Ambani. 🤣🤣 pic.twitter.com/xk3Ih0IhNP
— Jeet (@JeetN25) May 24, 2026
“>
தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் ரியான் ரிக்கெல்டன் மற்றும் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அல்லா கசன்பர் ஆகிய இருவர் மட்டுமே ஓரளவு சிறப்பாக விளையாடிய நிலையில், மற்ற நட்சத்திர வீரர்கள் சொதப்பியதால் அணி பலத்த விமர்சனங்களைச் சந்தித்தது.
இந்த நிலையில், பள்ளியின் பட்டமளிப்பு விழாவில் மாணவர் ஒருவர் அடித்த இந்த டைமிங் காமெடி கிரிக்கெட் ரசிகர்களிடையே பயங்கர ஷேர்களை அள்ளி வருகிறது.
