மும்பை பாந்த்ரா கிழக்கு பகுதியில் உள்ள கரீப் நகரில் சமீபத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதை அடுத்து, அங்கிருந்த மாற்றுத்திறனாளி நபர் ஒருவரின் நேர்காணல் வீடியோ இணையத்தில் வெளியாகி, அங்குள்ள மக்களின் அவலநிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

கொல்கத்தாவில் இருந்து மும்பைக்கு பிழைப்பு தேடி வந்ததாகக் கூறும் அந்த நபர், அங்குள்ள உள்ளூர் சந்தைப்பகுதியில் பிச்சை எடுத்து வாழ்வதாகவும், இதன் மூலம் ஒரு நாளைக்கு 700 முதல் 800 ரூபாய் வரை சம்பாதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நான் தங்கியிருந்த அறைக்கு மாத வாடகையாக 6,000 ரூபாய் செலுத்தி வந்ததாகவும், அவருடன் மேலும் 4 முதல் 5 பேர் தங்கியிருந்ததாகவும், அவரது குடும்பத்தினர் கொல்கத்தாவில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால், அடுத்து எங்கு செல்வது என்று தெரியாமல் தவிப்பதாக அந்த நபர் வேதனை தெரிவித்துள்ளார். “நான் இப்போது எங்கே தூங்குவேன்? என் பணத்தை எங்கே வைப்பேன்?” என்று கேட்கும் அவர், சாலைகளும் மூடப்பட்டதால் தங்குவதற்கு இடமின்றி தவிப்பதாகக் கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by भटकता_पत्रकार (@bhatakta_patrakar)

“>

இந்த நேர்காணலை நடத்தியவர், மும்பையில் பிச்சை எடுப்பவர் கூட மாதம் 20,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும் என்று அவரது பதிலை வைத்து ஆச்சரியப்பட்டுள்ளார். கரீப் நகரில் இருந்த பல சட்டவிரோதக் கட்டடங்கள் இடிக்கப்பட்டு, அங்கிருந்த இடிபாடுகள் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.