2023ம் வருடத்துக்கான இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான நீட்தேர்வுக்குவி நேற்று முதல் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. தேர்வர்கள் தேசிய தேர்வு முகமையின் https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இளங்கலை படிப்புக்கான நீட்தேர்வு வருகிற மே மாதம் 7-ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மே மாதம் 7ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்காக மாணவ-மாணவிகள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் இதற்கான ஆன்லைன் விண்ணப்ப கட்டணத்தை ரூ.100 உயர்த்தி தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. நீட் நுழைவுத் தேர்வுக்கு கடந்த ஆண்டு பொதுப் பிரிவினருக்கு ரூ.1,600 கட்டணம் வசூலிக்கப்பட்டது.