இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு மாணவர்கள் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில் இளநிலை மருத்துவ படிப்பிற்கு சேர்வதற்கான நீட் தேர்வுக்கு ஏப்ரல் 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் neet.nta.nic.in என்ற இணையதள முகவரிக்குள் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு கட்டணத்தை தற்போது தேசிய தேர்வு முகமை அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த வருடத்தை விட தற்போது நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 100 ரூபாய் அதிகமாக கட்டணத்தை உயர்த்தி உள்ளது.