இந்தியாவின் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்வதால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயில்வே சார்பாக பல்வேறு அறிவிப்புகள் அடிக்கடி வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால் ரயிலில் பயணிக்கும் மக்கள் பலரும் ரயில்வே விதிமுறைகளை முறையாக பின்பற்றுவது இல்லை. பொதுவாக ரயிலில் புகை பிடிப்பது ரயில்வே சட்டத்தை 167-வது பிரிவின் கீழ் குற்றமாகும். சக பயணிகள் மறுத்த பின்னரும் ரயில் பயணத்தின் போது யாராவது சிகரெட் பிடித்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

ரயிலில் தீக்குச்சிகளை கொளுத்துவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இது போன்ற செயல்களை செய்தால் தீ விபத்து ஏற்படும் எனவும், அவர்களுடன் பயணிக்கும் பயணிகளும் சிரமத்தை சந்திக்க நேரிடும் என ரயில்வே எச்சரித்துள்ளது. ரயில்களில் தீ விபத்து போன்ற சம்பவங்களை தடுப்பதற்காக சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் ரயிலில் யாராவது தீ வைத்தால் அது குறித்து இதன் மூலம் தெரிந்து விடும் என ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் ரயிலில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த விதியை மீறினால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.