‘ஆல்பா’ திரைப்படத்தின் மூலம் திரையில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்த தயாராகும் ஆலியா பட், சமீபத்தில் ரெட் சீ சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்றார். இந்த விழாவில் சர்வதேச சினிமாவுக்கான அவரது பங்களிப்பை மதித்து கோல்டன் குளோப்ஸ் ஹாரிசன் விருது வழங்கப்பட்டது. விழாவில் பேசிய ஆலியா, தனது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தார்.
இந்தியாவை சர்வதேச மேடைகளில் பிரதிநிதித்துவப்படுத்துவது அழுத்தமா என்ற கேள்விக்கு, ஆலியா, “அழுத்தம் அல்ல, பெருமை” என்று பதிலளித்தார். அதே நேரத்தில், பாகிஸ்தானிய ரசிகர் கேட்ட “பாகிஸ்தானுக்கு வருவீர்களா?” என்ற கேள்விக்கு, “வேலை என்னை எங்கு அழைத்தால் அங்கே போவேன்” எனக் கூறினார். மேலும் நடிகை ஆலியா பட் ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
