பொதுவாக சிலிண்டர்களை புக்கிங் செய்வதற்கு நிறைய வழிகள் உள்ளன. மிஸ்டு கால் மூலமாக, ஆன்லைன் மூலமாக மற்றும் எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலமாக சிலிண்டர் புக் செய்யலாம். ஆனால் இதில் எந்த வழியில் புக்கிங் செய்தால் உங்களுக்கு நன்மை கிடைக்கும் என்றும் எதில் சிரமங்கள் குறைவு என்பதையும் பார்க்க வேண்டும். சில நேரங்களில் நீங்கள் சிலிண்டரின் விலையை விட அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும். பெருமாளான மக்கள் தற்போது ஆன்லைன் மூலமாக சிலிண்டர் விலை முன்பதிவு செய்கிறார்கள். ஆன்லைனில் கேஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்யும்போது என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

அதாவது ஆன்லைனில் முன்பதிவுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படாது. எல்பிஜி ரீபில்களை முன் பதிவு செய்ய பாதுகாப்பாக மற்றும் வசதியான வழி. கேஸ் ஏஜென்சிக்கு செல்வது அல்லது விநியோகஸ்தர்களை பின்தொடர்வது போன்ற தொந்தரவுகள் எதுவும் இருக்காது. கேஸ் சிலிண்டரை எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் பதிவு செய்ய முடியும். எளிதாக பணம் செலுத்தலாம். ஆன்லைனில் புக்கிங் செய்யும்போது கேஷ் பேக் சலுகை கிடைக்கும். சில சலுகைகளை பயன்படுத்தி குறைந்த விலையில் சிலிண்டர் வாங்கலாம்.

எனவே நிறைய நன்மைகள் உள்ள சேவையான ஆன்லைன் மூலமாக சிலிண்டர் புக்கிங் செய்யலாம்.