சீனா 6 நாடுகளை சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 1 முதல் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், மலேசியா, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய ஆறு நாடுகளில் இருந்து சீனா வருபவர்களுக்கு விசா தேவை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு விசா இல்லாமல் அவர்கள் 15 நாட்கள் சீனாவில் தங்க முடியும் என்றும் கூறப்படுகிறது. ஒரு வருடத்திற்கு இந்த சோதனை முயற்சி செயல்படுத்தப்பட இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.