நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள ரோமியோ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில், தேர்தல் வருகிறது அது குறித்து மக்களுக்கு ஏதாவது அறிவுரை கூற விரும்புகிறீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த விஜய் ஆண்டனி, எல்லோருக்கும் ஓட்டு போட உரிமை உண்டு. ஆனால் யாருக்கு ஓட்டு போடுகிறோம் என யோசித்து போடுங்கள் என கூறினார்.

மேலும் நீங்கள் வரும் காலத்தில் அரசியலுக்கு வர ஆசை உள்ளதா என கேட்கப்பட்ட கேள்விக்கு, எனக்கு ஆசை இருக்கா என்பதை விடுங்கள், உங்களுக்கு நான் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசை உள்ளதா? உங்களுக்கு ஆசையாக இருந்தால் நான் அரசியலுக்கு வர தயார் என அவர் கூறியுள்ளார்.