நடிகை சித்தார்த் நடிகை அதிதி ராவை ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கபுரம் கோவிலில் இவர்களது திருமணம் இரு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்று உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் தற்போது எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.