யூடியூப் பிரபலமான’வில்லேஜ் குக்கிங்’ சேனலில் சமையல் செய்யும் தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என்று வில்லேஜ் குக்கிங் சேனலை சேர்ந்த சுப்பிரமணியன் வேலுசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தாத்தா விரைவில் குணம்பெற வேண்டுமென ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.