சமூக ஊடகங்களில் தற்போது ஒரு அபூர்வமான மற்றும் சுவாரஸ்யமான காணொளி வைரலாகி வருகிறது. காட்டின் நடுவே, ஒரு யானையின் வருகையால், சிங்கக் கூட்டமே திகைத்து ஓடுகிறது! “காட்டின் அரசன்” என அழைக்கப்படும் சிங்கங்களே இந்த மரியாதையை யானைக்கு வழங்கிய நிகழ்வு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், பல சிங்கங்கள் (ஆண், பெண் மற்றும் குட்டிகள் உட்பட) ஒரு மரத்தின் நிழலில் அமைதியாக ஓய்வெடுத்தன. மதிய நேரத்தினால் சூரிய வெப்பத்திலிருந்து தப்பி சாயங்கால ஓய்வை அனுபவித்துக் கொண்டிருந்தனர்.
— Nature Chapter (@NatureChapter) September 18, 2025
அந்த சமயத்தில், தூரத்திலிருந்து ஒரு யானை மெதுவாக நடந்து வந்து அந்த இடத்தை நோக்கி வர தொடங்குகிறது. ஆரம்பத்தில், சிங்கங்கள் இதை கவனிக்கவில்லை. ஆனால் யானை அருகில் நெருங்கியதும், சிங்கங்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது – அனைத்தும் ஒரே நேரத்தில் எழுந்து ஓடத் தொடங்கின. அதிர்ஷ்டவசமாக, யானை எந்த சிங்கத்தையும் தாக்கவில்லை. ஆனால் அதன் எளிய நெருக்கம் மட்டுமே பதற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்த வீடியோவை @NatureChapter என்ற பயனர் சமூக ஊடக தளமான X ல் பகிர்ந்துள்ளார். இது ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்து, நூற்றுக்கணக்கான கருத்துகளையும் பெற்றுள்ளது.
