நாசாவின் ஆர்ட்டெமிஸ் II விண்கலத்தில் பயணிக்கும் விண்வெளி வீரர்கள், பூமியிலிருந்து சுமார் 4,06,773 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர். 1970-ல் அப்பல்லோ 13 விண்கலம் படைத்த சாதனையை 56 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் முறியடித்துள்ளனர். நிலவின் மறுபக்கத்தில் ஆய்வு செய்தபோது, அங்குள்ள ஒரு பெயரிடப்படாத பள்ளத்திற்கு ‘கரோல்’ என்று பெயரிட வீரர்கள் முன்மொழிந்தனர்.
இது விண்கலத்தின் கமாண்டர் ரீட் வைஸ்மேனின் மறைந்த மனைவி கரோலின் நினைவாக வைக்கப்பட்ட பெயராகும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 2020-ல் மறைந்த தனது மனைவியின் பெயரை நிலவில் உள்ள பள்ளத்திற்குச் சூட்டிய இந்தத் தருணம், விண்வெளி வீரர்களைக் கண்ணீர் மல்கச் செய்தது. விண்கலத்திற்குள் வீரர்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து நெகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
<a href=”http://
Not every day you can get your wife in a spacesuit for a family selfie! Compliments to our kids for the photobomb!! pic.twitter.com/aPWammMTYY
— Reid Wiseman (@astro_reid) May 14, 2014
“>
இந்த நெகிழ்ச்சியான காட்சியை பூமியில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து வைஸ்மேனின் மகள்கள் நேரலையில் கண்டு நெகிழ்ந்தனர். இந்தச் செயல் விண்வெளி ஆராய்ச்சியில் அறிவியலைத் தாண்டி மனித உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் உண்டு என்பதைக் காட்டியுள்ளது.
