கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின், தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களிடம் உருக்கமாகப் பேசியுள்ளார். நாங்கள் இங்கு ஒரு செய்தியாக்க வேண்டும் என்பதற்காக வரவில்லை என்றும், மிகவும் மனவருத்தத்துடனும் துக்கத்துடனும் வந்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

​பாதிக்கப்பட்ட அந்தத் தாயின் இடத்தில் இருந்து பார்க்கும்போது அதன் ஒட்டுமொத்த வலியையும் தம்மால் உணர முடிகிறது என்று வேதனை தெரிவித்துள்ள அவர், நமக்கும் வீட்டில் குழந்தைகள் இருப்பதால் அந்தத் துயரம் என்னவென்று புரியும் என்றார். மேலும், இந்த கொடூரச் செயலைச் செய்த ஆட்கள் இனிமேல் இப்படி ஒரு தவறை நினைத்துக்கூடப் பார்க்காத அளவுக்கு மிகக் கடுமையான தண்டனை குற்றவாளிகளுக்கு நிச்சயம் பெற்றுத் தரப்படும் என்று அமைச்சர் விக்னேஷ் உறுதியளித்துள்ளார்.