டாஸ்மாக் கடைகளை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் பாதுகாப்பு குறைபாடுள்ள ஏரியாக்களில் நடக்கும் அசம்பாவிதங்களைத் தடுக்க, தமிழகத்தை ஒட்டுமொத்தமாக ‘ஜீரோ டார்க் ஸ்பாட்’ ஆக மாற்ற முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். கடந்த 15, 20 வருடங்களுக்கும் மேலாகவே தமிழகத்தில் இப்படிப்பட்ட பாதுகாப்பற்ற இருண்ட இடங்கள் இருந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

​இதன் அடிப்படையில், தமிழகம் முழுக்க பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் இருட்டான இடங்கள் எங்குள்ளது என்பது குறித்த கணக்கெடுப்பைத் தங்களது புதிய அரசு தீவிரமாக எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கோயம்புத்தூர், சூலூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள பாதுகாப்பற்ற இடங்களில் உடனடியாக சிசிடிவி கேமராக்கள், தெருவிளக்குகள் பொருத்த கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், தேவைப்படும் இடங்களில் காவலர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் விவரித்துள்ளார்.