தமிழக வெற்றி கழக (தவெக) அரசின் அமைச்சரான கே.ஏ.செங்கோட்டையன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாகக் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவை அவிநாசி சாலையில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் அவருக்குத் தற்போது மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவருக்கு மருத்துவர்கள் குழுவினர் தொடர்ந்து சிறப்பான சிகிச்சை அளித்து வரும் நிலையில், தற்போது அவரது உடல்நிலை முற்றிலும் சீராக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், தவெக அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் தற்போதைய ஆரோக்கிய நிலை குறித்து இன்னும் சில மணி நேரங்களில் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கை வெளியாகும் என்று கூறப்படுகிறது.
