திமுக மற்றும் அதிமுக இணைந்து கூட்டணி அமைக்க பாஜகவின் முக்கிய தலைவர் ஒருவர் கனெக்டிங் கால் மூலம் பேசியதாகக் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த ரகசியப் பேச்சுவார்த்தையின் போது, எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் என்று கூறியதும் உதயநிதி ஸ்டாலின் துள்ளிக்குதித்து சம்மதம் தெரிவித்தார் என்று அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

​மேலும், பாஜகவுக்கு சாதகமாக இந்த முடிவை எடுப்பதற்குத் தமிழக ஆளுநரின் முழு ஒத்துழைப்பும் இருந்ததாக அவர் சாடியுள்ளார். முதலமைச்சர் விஜய் அரசியலுக்குள் வரக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே பாஜக, அதிமுக, திமுக ஆகிய மூன்று கட்சிகளும் ரகசியமாகக் கூட்டணி சேர்ந்துள்ளதாக மாணிக்கம் தாகூர் கிளப்பியுள்ள இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.