தமிழக முதலமைச்சர் விஜய்யிடம் நடிகர் விஜய் சேதுபதி இரண்டு முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஏற்கனவே கோரியிருந்தபடி, தமிழக அரசு சார்பில் தனி ஓடிடி (OTT) தளம் தொடங்கினால் அது சினிமாத்துறைக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருக்கும் என்று அவர் தனது வேண்டுகோளைப் பதிவு செய்துள்ளார்.

​மேலும், திரையரங்கு டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால், தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப திரையரங்கு கட்டணங்களை உயர்த்துவது குறித்து முதலமைச்சர் விஜய் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சினிமாத்துறையின் பொருளாதார வளர்ச்சிக்காக விஜய் சேதுபதி முன்வைத்துள்ள இந்த இரண்டு கோரிக்கைகளும் தற்பொழுது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.