சமூக வலைதளங்களில் ஒரு பதறவைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. போக்குவரத்து விதிகளை மீறிய ஒரு பைக் ஓட்டியைப் பிடிக்க காவல்துறை அதிகாரி ஒருவர் மிகுந்த துணிச்சலுடன் சாலையின் குறுக்கே ஓடி அவரைத் தடுக்க முயல்கிறார். அந்த பைக் ஓட்டி நிற்காமல் வேகமாகச் செல்ல முயல, எதிர்பாராத விதமாக அந்த அதிகாரி பைக் மீது பாய்ந்து அதை நிறுத்தப் போராடுகிறார்.

மேலும் கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த மோதலில் காவல்துறை அதிகாரி மற்றும் பைக் ஓட்டி ஆகிய இருவருமே நிலைதடுமாறி சாலையில் பயங்கரமாக விழுந்தனர். அதிவேகமாக வந்த வாகனங்களுக்கு மத்தியில் இந்த விபத்து நடந்ததால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது ஒருபுறம் நிம்மதியைத் தந்தது.

 

View this post on Instagram

 

A post shared by Majhaexpect (Punjabi Memes) (@majhaexpect)

“>

இந்நிலையில் கடமைக்காகத் தன் உயிரைப் பணையம் வைத்த அந்த அதிகாரியின் நிலையும், சட்டத்தை மீறிய அந்த இளைஞரின் அலட்சியமும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. போக்குவரத்து விதிகளை மதிக்காமல் செயல்படுவது எப்படிப்பட்ட விபரீதங்களை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த காட்சி ஒரு மிகச்சிறந்த சான்றாகும்.